கணவரை கொன்று வீட்டில் புதைத்த மனைவி - டைல்ஸால் வந்த சந்தேகம்
கணவரை கொன்று வீட்டில் புதைத்து விட்டு மனைவி காதலருடன் தப்பியோடியுள்ளார்.
மாயமான சகோதரர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாலசோபரா பகுதியை சேர்ந்த விஜய் சவுகான்(35) என்பவருக்கு சாமன் என்ற பெண்ணுடன் திருமணமாகி 7 வயது மகன் உள்ளது.
விஜய் சவுகான் தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து புதிதாக வீடு வாங்கியுள்ளார். வீட்டிற்கு பணம் தேவைப்பட்டதால், அவரது சகோதரர் அகிலேஷ் சவுகானை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சவுகானின் மனைவிக்கு அழைத்த போது, வேலை விடயமாக சவுகான் குர்லாவிற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர், சவுகானின் மனைவி செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுளது.
அதை தொடர்ந்து, அவரது சகோதரர், சவுகானின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
சந்தேகத்தை கிளப்பிய டைல்ஸ்
அவரது மனைவி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயமானது, மேலும் வீட்டின் மூலையில் புதிதாக பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் அவருக்கு சந்தேகத்தை கிளப்பியது.
இதைத்தொடர்ந்து, காவல்துறை உதவியுடன் புதிதாக டைல்ஸ் இருந்த பகுதியில் தோண்டி பார்த்த போது, முதலில் சவுகானின் சட்டை கண்டறியப்பட்டது. மேற்கொண்டு தோண்டியதில் அவரின் சிதிலமடைந்த உடலும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த தடயவியல் குழு மாதிரிகளைச் சேகரித்து, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சவுகானின் மனைவி சாமன் அதே பகுதியை சேர்ந்த மோனு விஸ்வகர்மா (33) என்பவருடன் உறவில் இருந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து, சவுகானை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். காவல்துறையினர், இருவரையும் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |