கணவரின் லஞ்சத்தால் இரவோடு இரவாக மனைவியின் மேயர் பதவி நீக்கம்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் கணவர் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் பதவி வகித்திருக்கும் மனைவி வீட்டில் இருந்ததால் அவரின் மேயர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கிய கணவர்
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் சுஷில் குர்ஜார் மற்றும் முனேஷ் குர்ஜார். இதில் முனேஷ் குர்ஜார் என்பவர் பெண் மேயராக இருந்தார்.
இதில் பெண் மேயரின் கணவரான சுஷில் குர்ஜார் நிலம் ஒன்றை குத்தகைக்கு விட்டதற்காக வீட்டில் வைத்து ரூ.2 லட்சம் லஞ்சமாக வாங்கியுள்ளார்.
அப்போது, அவரின் மனைவியான முனேஷ் குர்ஜார் வீட்டில் தான் இருந்துள்ளார். அப்போது, லஞ்சம் வாங்கிய சுஷில் குர்ஜாரை ஊழல் தடுப்பு பிரிவினர் அவரை வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து, ஊழல் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரது உதவிளார்களான நாராயண் சிங், அனில் துபே ஆகியோரையும் பிடித்தனர். இதில் உதவியாளர் நாராயண் சிங் வீட்டிலும் ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பெண் மேயரின் கணவர் சுஷில், நிலம் குத்தகைக்கு விடப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். அந்த நபர், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் செய்ததையடுத்து அவர் பிடிபட்டார்.
பெண் மேயர் பதவி நீக்கம்
இதில், லஞ்சம் வாங்கும் போது மேயர் பதவி வகித்திருந்த மனைவியான முனேஷ் குர்ஜாரும் வீட்டில் இருந்துள்ளார். அதனால், லஞ்சம் வாங்குவதில் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், வழக்கில் தலையிடக் கூடும் என்பதாலும் மாநில அரசான காங்கிரஸ் அவரை இரவோடு இரவோக பதவிநீக்கம் செய்தது.
அதுமட்டுமல்லாமல் முனேஷ் குர்ஜாரின் மேயர் பதவி நீக்கப்பட்டதோடு அவரின் கவுன்சிலர் பதவியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |