நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த நபர்: காப்பாற்றிய மனைவி இவர்தான்
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி திடீரென உடைய, பயணி ஒருவர் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
அந்த பயணி மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் முதலான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நடுவானில் நிகழ்ந்த பயங்கரம்...
கடந்த வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு, கிரீஸ் நாட்டிலிருந்து RYANAIR விமானம் ஒன்று ஜேர்மனி நோக்கிப் புறப்பட்டது.

விமானம் உயர எழுந்து 20,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென டமார் என பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது.
அதாவது, அந்த விமானத்தின் எஞ்சினிலிருந்து ஒரு துண்டு உடைந்து வந்து ஜன்னல் கண்ணாடியில் மோத, ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்க, திடீரென ஜன்னல் திறந்ததால் ஏற்பட்ட அழுத்தக்குறைவு காரணமாக, ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்த பயணி ஒருவர், ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.

உடனே அவரது மனைவி அவரை இரு கைகளாலும் இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டுள்ளார். அருகிலிருந்த சிலரும் அவரைப் பிடித்துக்கொள்ள, அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் அவர்கள் அவரை பிடித்துக்கொண்டதாலும் உயிர் தப்பினார் அந்தப் பயணி.
அவர்கள் இவர்கள்தான்...
தற்போது, அந்த பயணி மற்றும் அவரைக் காப்பாற்றிய அவரது மனைவி தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பயணியின் பெயர் Ljubiša Karović (61) அவரது உயிரைக் காப்பாற்றிய அவரது மனைவியின் பெயர் Svetlana Grković. அவர்கள் இருவரும் செர்பியா நாட்டவர்கள்.

அந்த நெரத்தில், இறந்தால் இருவரும் சேர்ந்தே இறப்போம் என்னும் எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது என்று கூறும் ஸ்வெட்லானா, அது ஒரு பயங்கர அனுபவம் என்கிறார்.
இதற்கிடையில், தன் கணவரான Ljubišaவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் கூறும் ஸ்வெட்லானா, அவருக்கு நடந்தது முழுமையாக நினைவில்லை என்றும் கூறுகிறார்.
அத்துடன், தான் தன் கணவரைப் பிடித்துக்கொண்டபோது, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கூட தன் கணவரின் கால்களைப் பிடித்துக்கொண்டதாகவும், அவர்களுக்கு தான் நன்றி சொல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் ஸ்வெட்லானா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |