புடின் எங்கே? டூப் முதல் மரணம் வரை உலவிவரும் வதந்திகள்
நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குப்பின், ரஷ்ய ஜனாதிபதி புடின் பொது இடங்களில் காணப்படவில்லை என செய்தி வெளியானதைத் தொடர்ந்து, புடின் எங்கே என்பது தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன.
டூப் முதல் மரணம் வரை உலவிவரும் வதந்திகள்
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி, ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லியதுபோதுதான் கடைசியாக தொலைக்காட்சியில் தோன்றினார் புடின்.
அதற்குப் பிறகு, 12, 13 நாட்களாக அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை!
Image: EVGENIA NOVOZHENINA/POOL/EPA-EFE/REX
இந்நிலையில், வழக்கம்போல, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார், இப்போது இருப்பது அவருடைய டூப்தான் என்னும் ரீதியில் வதந்திகள் பரவிவருகின்றன.
வழக்கமாக புடினுக்கு புற்றுநோய் என்னும் ரீதியில் செய்தி வெளியிடும் டெலிகிராம் சேனல், புடின் இறந்துவிட்டதாகவும், அவரது உடல், Valdaiஇலுள்ள அவரது வீட்டில் ஒரு ஃப்ரீஸரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
Image: Getty Images
ஏற்கனவே சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது புடினுடைய கால்கள் அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆடுவதையும், அவரால் சரியாக நிற்கமுடியாமல் இருப்பதையும் மேற்கோள் காட்டி, புடினுக்கு பார்க்கின்சன் பிரச்சினையும், புற்றுநோயும் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின.
2022ஆம் ஆண்டு, மே மாதம், ரஷ்ய உளவுத்துறையை மேற்கோள்காட்டி, புடின் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்றும் ஒரு செய்தி வெளியானது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளதால், புடின் பாதுகாப்பாக பதுங்கு குழிக்குள் மறைந்திருக்கலாம் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.
உண்மை நிலை என்ன என்பது புடினுக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |