வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தாலிபன்களை புகழ்ந்த அல்கொய்தா! கலிபோர்னியாவில் காட்டுத் தீ..உலக செய்திகள்
தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது. அமெரிக்க இணையதளமான தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி காபூல் விமான நிலையத்தில் முன்னதாக பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டதில், 169 ஆப்கானிஸ்தான் குடிமக்களும், 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் மரணம் அடைந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
மேலும் காட்டுத் தீ காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியாவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.