செயற்கை நுண்ணறிவு வேலை பறிக்குமா? AI-யால் யாருக்கு பாதிப்பில்லை? பில்கேட்ஸ் கருத்து
காலம் மாறினாலும், தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்தாலும், வேலைவாய்ப்புகளைப் பற்றிய பயம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில், பலரது மனதில் “இது நம்ம வேலைய பறிச்சிடுமோ?" என்ற கவலை எழுந்து இருப்பது நியாயமானதுதான்.
இந்நிலையில், சில பிரபலங்களின் கருத்துக்கள் இந்தப் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.
ஆனால் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அடுத்த மூன்று வருடங்களில் சில துறைகளில் செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்க முடியாது என்பது குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கோடிங் துறை
பலர் செயற்கை நுண்ணறிவால் கோடிங் செய்ய முடியும் என்று நினைத்தாலும், பில்கேட்ஸ் வேறு கருத்தை முன்வைக்கிறார்.
செயற்கை நுண்ணறிவால் முழுமையாக கோடிங் செய்ய முடியாது, அப்படி செய்தாலும் அதில் தவறுகள் இருக்கும் என்கிறார்.
அந்தத் தவறுகளை சரி செய்ய மனிதர்கள் தேவை. எனவே, கோடர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய பயம் தேவையில்லை.
எரிசக்தித் துறை
இத்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு தேவைகள் உள்ளன. இதனால், செயற்கை நுண்ணறிவால் எல்லாவற்றையும் கையாள முடியாது.
உயிரியல் துறை
இத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு போதுமான நிதி கிடைப்பதில்லை.
மேலும், மரபணு தொடர்பான ஆராய்ச்சிகளை மனிதர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
எனவே, இத்துறையில் இருப்பவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவால் எந்த அச்சுறுத்தலும் இல்லை.
செயற்கை நுண்ணறிவின் பதில்
செயற்கை நுண்ணறிவால் என்ன வேலைகளைச் செய்ய முடியாது என்பதை அறிய, செயற்கை நுண்ணறிவிடமே கேட்டோம்.
அதற்கு அது, மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய வேலைகளைத் தன்னால் செய்ய முடியாது என்று கூறியது.
குறிப்பாக, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் பணிகளை எந்த செயற்கை நுண்ணறிவாலும் செய்ய முடியாது என்று அதுவே ஒத்துக்கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |