மேகன் மார்கலின் சர்ச்சைக்குரிய நேர்காணல் நியூசிலாந்தை பாதிக்குமா? பிரதமர் ஜசிந்தா திட்டவட்ட பதில்
மேகன் மற்றும் ஹாரி அளித்த நேர்காணல் நியூசிலாந்தை பாதிக்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பிரித்தானிய அரச இளவரசர் ஹாரி மற்றும் அவரது அமெரிக்க மனைவி மேகன் மார்கல் ராயல் குடும்பத்தின் மீது இனவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான Oprah Winfrey உடனான நேர்காணலில் வெளியான இந்த சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேகன் மார்கலின் குற்றச்சாட்டுகளுக்கு பல தரப்பினர் எதிராக கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இராணி எலிசபெத் II-வின் தலைமயிலும், பிரித்தானிய அரசியலமைப்புடன் இணைந்திருக்கும் நியூசிலாந்தின் பிரதமர் சிந்தா ஆர்டெர்னிடம், இப்போது கிளம்பியுள்ள பிரச்சினைகளால் நியூசிலாந்தில் பாதிப்பு இருக்குமா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜசிந்தா, நியூசிலாந்தின் அரசியலமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது, அதனால் நாடு எப்போதும் குடியரசாக மாற வாய்ப்பில்லை என்றும் பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தை அரச தலைவராகக் ஏற்பதிலிருந்து இருந்து விலகிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.