ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி - போரில் குதிக்கிறதா சவுதி அரேபியா?
ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வந்தது.
ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு, தங்கள் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டியது.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் வான் படை கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி, ஆப்கானிஸ்தானின் காபூலில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ( TTP) தலைவரான நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் ராணுவம், எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்திய தாக்குதலில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 7 பாகிஸ்தானின் 25 ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு, 7 பாகிஸ்தான் வீரர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், 200 தலிபான்களை கொன்று விட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உடனான எல்லையை மூடியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
போரில் குதிக்கிறதா சவுதி?
அதேவேளையில், சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும்சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இதன்படி இரு நாடுகளில் எந்த ஒரு நாடு தாக்கப்பட்டாலும் அதை இரு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்பட வேண்டும் என அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
தற்போது இரு நாடுகளும் பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றால், பாதுகாப்பு ஒப்பந்தப்படி சவுதி அரேபியா ராணுவ ரீதியாக பாகிஸ்தானை ஆதரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |