சாரதி உரிமம் பெறாமலே ஐக்கிய அமீரகத்தில் ஒருவர் கார் வாங்க முடியுமா... விரிவான விளக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவர் தமது பெயரில் கார் வாங்குவதற்கு முன்னர், கருத்தில் கொள்ள வேண்டிய பல அம்சங்கள் உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக அந்த வாகனத்தின் பதிவு மற்றும் காப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் தெரிந்து கொள்வது முக்கியம்.
போக்குவரத்து தொடர்பான ஆவணம்
ஒருவர் கார் வாங்குவதற்கு முக்கியமாக அமீரக அடையாள அட்டை கட்டாயம் என கூறுகின்றனர். அத்துடன் போக்குவரத்து தொடர்பான ஆவணம் ஒன்றை உங்கள் அமீரக குடியிருப்பு முகவரியின் கீழ் துவங்கப்படும்.
இந்த இரு ஆவணங்களும் போதுமானது ஒருவர் ஐக்கிய அமீரகத்தில் கார் வாங்குவதற்காக. அமீரகத்தில் எந்த மாகாணத்தில் நீங்கள் குடியிருந்து வருகிறீர்களோ அந்த மாகாணத்தில் போக்குவரத்து தொடர்பான ஆவணம் ஒன்றை பதிவு செய்து துவங்க வேண்டும்.
துபாய் மாகாணத்தில் குடியிருப்பவர்கள் நேரிடையாக RTA அலுவலகத்திற்கு சென்று TC இலக்கம் எனப்படும் போக்குவரத்து ஆவணம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணமாக Dh200 வசூலிக்கின்றனர்.
செல்லுபடியாகும் சாரதி உரிமம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சாரதி உரிமம் பெற தற்போது நீங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருபவர் என்றால், உங்கள் பெயரில் தானாகவே ஒரு போக்குவரத்து இலக்கம் பதிவு செய்யப்படும்.
இதனையடுத்து, உங்கள் வாகனத்திற்கான காப்பீடு பெற வேண்டும். இதற்கு கட்டாயம் வாகன சாரதி உரிமம் தேவைப்படும். பொதுவாக, துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும், செல்லுபடியாகும் சாரதி உரிமம் வைத்திருப்பது கார் காப்பீட்டைப் பெறுவதற்கான அடிப்படைத் தேவையாகும்.
அதாவது, காப்பீட்டாளர்கள் தங்கள் வாகனத்தை காப்பீடு செய்ய விரும்பும் நபர் சட்டப்பூர்வமாக நாட்டில் வாகனம் செலுத்த அனுமதிக்கப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், வாடகை சாரதி அல்லது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் நீங்கள் வாகனம் வாங்குவதாக இருந்தால், அவர்களின் செல்லுபடியாகும் சாரதி உரிமம் என்பது கட்டாயம் என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |