நியூசிலாந்தில் இலங்கையர் நடத்திய தாக்குதல்! நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் கண்ட நபர் சொன்ன தகவல்
நியூசிலாந்தில் இலங்கையர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சுமார் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட நபர் அது குறித்து கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் North Island மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரத்தில் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் நியூ லின் பகுதியில் இருக்கும் Countdown சூப்பர் மார்க்கெட்டில், கத்தியுடன் நுழைந்த 32 வயதாகும் இலங்கையர் ஒருவர் நடத்திய திடீர் கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கபப்ட்டதால், விரைந்து வந்த பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்ததாக நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அங்கிருந்த Jim Taoirangi என்பவர் கூறுகையில், நான் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நூழைந்த போது, பெண் ஒருவர் தோளில் இரத்தக் காயங்களுடன் சென்றதைக் கண்டதால், எனக்கு குழப்பம் நிலவியது.
அதன் பின் உள்ளே கத்தியுடன் நபர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. உடனே பாட்டில்கள், அங்கிருந்த தகரங்களை வீசி மக்கள் தப்பிக்க முயற்சிப்பதை பார்க்க முடிந்தது.
அதற்குள் பொலிசார் உடனடியாக மார்க்கெட்டிற்குள் ஓடினர், ஒரு மூன்று முதல் ஐந்து வினாடிகளுக்குள் பொலிசார் துப்பாக்கியால் மூன்று முதல் நான்கு வரை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
அதன் பின் பொலிசார் அந்த பகுதியை கட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறினார். மேலும், இந்த சம்பவம் காரணமாக காயம் அடைந்திருப்பவர்கள் ஆக்லாந்து நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிறிய அளவிலான காயங்களுடன் உள்ள ஒரு நோயாளி Waitākere மருத்துவமனைக்கும், மற்றொருவர் Middlemore மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுதாகவும், தாக்குதல் நடத்தியவரை அந்த இடத்திலே சுட்டு கொன்றுவிட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.