புதை மண்ணில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளம்பெண்: அலறல் சத்தத்தை பின்தொடர்ந்த மீட்பு குழு
புதை மண்ணில் 3 நாட்களாக சிக்கி காணாமல் போய் இருந்த பெண் எழுப்பிய அலறல் சத்தத்தை பின்தொடர்ந்து சென்று காட்டு பகுதியில் இருந்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்
அமெரிக்காவில் எம்மா டெட்யூஸ்கி என்ற 31 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த ஜூன் 26ம் திகதி காணாமல் போய் இருந்த நிலையில், பார்டர்லேண்ட் ஸ்டேட் பூங்காவில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என மாசசூசெட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தென்கிழக்கு நடைபாதையில் மலையேறுபவர்கள் நடந்து கொண்டிருந்த போது கேட்ட அலறல் சத்தத்தை தொடர்ந்து, அவர்கள் திங்கட்கிழமை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Stoughton Police Department
இதையடுத்து அலறல் சத்தத்தை பின் தொடர்ந்து சென்ற மீட்புக் குழு இறுதியில் புதை மண்ணில் சிக்கி இருந்த இளம்பெண்ணை பத்திரமாக வெளியே எடுத்தனர்.
அத்துடன் அவர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் உடனடியாக ப்ரோக்டனில் உள்ள குட் சமாரியன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட பெண் கிட்டத்தட்ட 3 நாட்களாக இந்த புதை மண்ணில் சிக்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stoughton Police Department
உள்ளூர் மக்களுக்கு பொலிஸார் நன்றி
இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறையில் எழுதியுள்ள தகவலில், மக்கள் கடைசி வரை அவள் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை, பொதுமக்களின் உதவி இல்லையென்றால் அவர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்க மாட்டார் என தெரிவித்துள்ளது.
காணாமல் போன எம்மா டெட்யூஸ்கி இறுதியாக வீட்டுக்கு அருகே பார்க்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய வீட்டை விட்டு காணாமல் போகும் போது அவருடைய போனை எடுத்து செல்லவில்லை,
Stoughton Police Department
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |