கணவனின் ஆணுறுப்பை துண்டித்த மனைவி! இரத்த கரையுடன் மடக்கி பிடித்த பொலிஸார்
அர்ஜென்டினாவில் கணவனின் ஆணுறுப்பை கத்தியால் அகற்றி கொலை செய்த மனைவியை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கணவனை கொன்ற மனைவி
அர்ஜென்டினாவின் ஆல்டோஸ் டி சான் லோரென்சோ (Altos de San Lorenzo) குடியிருப்பு பகுதியில் உளவியலாளர் மனைவி ஃப்ளோரென்சியா அமடோ கட்டானியோ(41) தனது இசைக்கலைஞர் கணவரான பெட்ரோ ஃபெடெரிகோ ஜராட்டின் உடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் உள்ளூர் வட்டாரங்கள் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
Newsflash
இந்த ஜோடிக்கு 5 வயதில் மகன் ஒருவனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி Florencia Amado Cattane தனது கணவர் பெட்ரோ-வை உடல் முழுவதும் பல இடங்களில் கத்தியால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் கணவனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்து கொலையும் செய்துள்ளார்.
பொலிஸார் கைது
சம்பவம் அறிந்து குறிப்பிட்ட பகுதிக்கு வந்த பொலிஸார், பாதிக்கப்பட்ட பெட்ரோவின் உடலில் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து கொலையாளியான அவரது மனைவி அமடோ கட்டேனியோ-வை ஜனவரி 11ம் திகதி "கைகளில் இரத்தக்கறையுடன்" அவரது தாயார் வீட்டிற்கு வந்த பிறகு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Newsflash
கைது செய்யப்பட்ட Amado Cattaneo, லா பிளாட்டாவில்(La Plata) உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மனநல வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். அவள் மனரீதியாக தகுதியற்றவள் என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அவள் ஒரு விசாரணையை எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று வழக்கறிஞர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Newsflash