நிலநடுக்கத்தால் சிக்கிய தாய்-மகனை காப்பாற்ற போரடிய துயரம்! கண்கலங்க வைக்கும் வீடியோ: 200-க்கு மேற்பட்டோர் பலி
ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், கட்டிட இடிபாடுகளுக்கிடையே பெண் மற்று ஒரு குழந்தை சிக்கியதால், அவர்கள் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி பலரையும் கண்கலங்க வைக்கிறது.
கரீபியன் தீவுகளில் ஒன்றான Haiti-வில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2-ஆக பதிவாகியது.
இந்த நிலநடுக்கம், Haiti-யின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது Haiti-வில் இருக்கும் தலைநகர் Port-au-Prince-வுக்கு மேற்கே 7.5 மைல் தொலைவிலும், Petit Trou de நகரில் இருந்து 5 மைல் தொலைவிலும் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Rescuers dig out a woman and child from the rubble after a massive earthquake hit Haiti earlier on Saturday https://t.co/kSJsD7q4mO pic.twitter.com/yzXXOQp1By
— ITV News (@itvnews) August 14, 2021
இதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் தரைமட்டமாகின.
இதில் பலர் ஈடுபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர்.
தற்போது வரை இந்த நிலநடுக்கம் காராணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால், தாய் மற்றும் மகள் கட்டிட இடுபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர்.
இதனால் அவர்களை காப்பாற்றுவதற்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராடியுள்ளனர்.
இறுதியாக தாய் மற்றும் மகள் உயிரோடு மீட்கப்பட்டனர். அந்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.