ஜெட் விமானத்தில் பெண் காவலரை கடித்த பெண் பயணி: விமானத்திற்குள் ஏற்பட்ட பரபரப்பு
விமானத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் பொலிஸ் அதிகாரியை கடித்த பெண் பயணி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் பரபரப்பு
அர்ஜெண்டினாவின் ஜார்ஜ் நியூபெரி விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவருக்கும் விமான நிலைய ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.
புவென்ஸ் அயர்ஸிலிருந்து கோர்டோபா நோக்கிச் சென்ற ஜெட் ஸ்மார்ட் விமானத்தில் லக்கேஜ் கட்டணம் தொடர்பாக பெண் பயணி ஒருவருக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
லக்கேஜ் கட்டணத்தை செலுத்த தவறியதோடு விமான நிலைய விதிகளை மீறி அந்த பெண் பயணி விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.
உடனடியாக இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விமான ஊழியர்கள் தகவல் கொடுத்த நிலையில், விமானத்திற்குள் நுழைந்த பொலிஸார் உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறுமாறு அந்த பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் விமானத்திற்குள் பெரும் அமளி ஏற்பட்டது. அத்துடன் விமானத்தில் நிகழ்ந்த வாக்குவாதத்தின் போது பெண் பொலிஸார் ஒருவரை அந்த பெண் பயணி கடித்தது மற்ற விமான பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒருவழியாக இறுதியில் அந்த பெண் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது சக பயணிகள் கைதட்டி பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |