கல்லறைக்குள் இருந்து கேட்ட பெண்ணின் அழுகுரல்: திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரேசில் நாட்டில் கல்லறை ஒன்றில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்ட நிலையில், திறந்து பார்த்த அதிகாரிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
கல்லறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்
இந்த சம்பவத்தில், பொலிசாரால் 36 வயதுடைய பெண் ஒருவர் கல்லறைக்குள் இருந்து மீட்கப்பட்டார். Minas Gerais மாகாணத்தை சேர்ந்த கல்லறை தோண்டும் குழுவினர் சிலர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளனர்.
Credit: Newsflash
அதில், புதிதாக உருவாக்கப்பட்ட கல்லறை ஒன்றில் ரத்தக்கறை காணப்பட்டுள்ளதாகவும், உள்ளே இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், தொடர்புடைய கல்லறையில் பெண்ணின் அழுகுரலை உறுதி செய்ததுடன், கல்லறையை திறந்து அவரை மீட்டுள்ளனர்.
மூச்சுவிட சிரமத்தில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையிலும் சேர்ப்பித்துள்ளனர். மட்டுமின்றி, அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முகமூடியணிந்த இருவர் தம்மை கல்லறை பகுதிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் கடுமையாக தாக்கி, கல்லறைக்குள் வைத்து மூடியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராணுவ பொலிசார் தெரிவிக்கையில், அந்த நபர்களின் போதை மருந்தை இவர் பாதுகாத்து வந்ததாகவும், அவர்களை ஏமாற்றியதால், கடுமையாக தாக்கி, கல்லறைக்குள் உயிருடன் மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
Credit: Newsflash
இதனிடையே, காவல்துறையினர் தெரிவிக்கையில், துப்பாக்கி தொடர்பான பிரச்சனையே, அந்த நபர்களால் குறித்த பெண் கல்லறைக்குள் பூட்டப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அந்த நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். கல்லறைக்குள் அவர் எப்போது முதல் சிக்கிக்கொண்டார் என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.