கணவருக்கு மதிய உணவு: தினமும் பணம் வசூலிக்கும் மனைவி: இணையத்தில் சூடு பறந்த விவாதம்!
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் தினசரி கணவனுக்குத் தயாரிக்கும் மதிய உணவுக்காக அவரிடம் பணம் வசூலிப்பதாக தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒரு நாளைக்கு 10 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ₹1,160) வசூலிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு வைரல் வீடியோவில், "என் கணவர் வேலைக்குச் செல்லும்போது, அவருக்கு நான் மதிய உணவு சமைத்து தருகிறேன். இதற்காக ஒரு நாளைக்கு 10 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கிறேன்.
அவர் வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்தத் தொகையை வேறு ஒருவருக்குத்தான் கொடுக்கப் போகிறார். அதற்குப் பதிலாக ஏன் எனக்குத் தரக்கூடாது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரது இந்த வீடியோ விரைவாகப் இணையத்தில் பரவியது. இதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டனர். அதில் ”அன்புக்கும், தங்கள் துணையின் சமையலுக்கும் விலை நிர்ணயிக்கக் கூடாது" என்று பலர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம், குடும்ப உழைப்பின் மதிப்பு மற்றும் உறவுகளுக்குள் நிதி ஏற்பாடுகள் குறித்த புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |