இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியுடன் நெருங்கிய பெண்.. பின்னர் நடந்த பயங்கரம்: கமெராவில் சிக்கிய காட்சி
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையே மோதல்கள் தொடரும் நிலையில், எல்லையில் முகாமிட்டிருக்கும் இஸ்ரேல் வீரர்களை நோக்கி, பர்தா அணிந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நெருங்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மேற்கு கரை நகரமான Hebronக்கு வெளியே, Elias Junction என்ற பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அப்போது, பர்தா அணிந்த பெண் ஒருவர் இயந்திரத்துப்பாக்கியுடன் இஸ்ரேல் வீரர்களை நெருங்கியுள்ளார்.
அந்த காட்சி CCTV கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த பெண் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு, இஸ்ரேல் வீரர்கள் அந்தப் பெண்ணை நோக்கி சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த பெண் சாலையோரமாக இறந்து கிடக்க, அவர் வைத்திருந்த துப்பாக்கியை இஸ்ரேல் வீரர் ஒருவர் காலால் எட்ட தட்டி விடும் காட்சி மற்றொரு வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த பெண் சுட்டதில் இஸ்ரேல் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.