விமான நிலையத்தில் இறந்து கிடந்த 40 வயது பெண்: இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தாரா?
விமான நிலையத்தில், பொதிகள் திரும்ப பெறப்படும் பகுதியில் உள்ள இயந்திரங்களில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமான நிலையத்தில் இறந்து கிடந்த பெண்
அமெரிக்காவின் சிகாகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் (Chicago’s O’Hare) பெண் ஒருவர் பொதிகள் திரும்ப பெறப்படும் பகுதியில் உள்ள இயந்திரங்களில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகாகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தின் 5வது டெர்மினல் பகுதியில் பதிலளிக்க முடியாத நிலையில் விழுந்து கிடந்தார்.
பின்னர் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதுவரை அவர் சுற்றுலா பயணியா அல்லது விமான நிலைய பணியாளரா என்று தெளிவாக தெரியவில்லை.
அதேசமயம் பொலிஸார் மற்றும் சிகாகோ தீயணைப்பு துறையினர் உயிரிழந்த பெண்ணின் கூடுதல் தகவலை இதுவரை வெளியிடவில்லை.
விமான நிலையமும் இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |