டெல்லி ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்
தலைநகர் டெல்லியில் நேற்றிரவு பெய்த தொடர் மழையின் போது டெல்லி ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல முயன்ற பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கிழக்கு டெல்லியின் ப்ரீத் விஹாரைச் சேர்ந்த சாக்ஷி அஹுஜா (Sakshi Ahuja), இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று அதிகாலை 5:30 மணியளவில் ரயில் நிலையத்தை அடைந்தார்.
அங்கு மழையால் தேங்கி நின்ற தண்ணீரை கடக்கும்போது, அவர் மின்கம்பத்தைப் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது சகோதரி மத்வி சோப்ராவுடன் (Madhvi Chopra) சேர்ந்து, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தனர்.
புது தில்லி ரயில் நிலையத்தின் வெளியேறும் எண் ஒன்றுக்கு (Exit No-1) அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. மின்கம்பத்தின் அடியில் இருந்த மின் கம்பிகள் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
The deceased woman has been identified as Sakshi Ahuja, a resident of Preet Vihar, Delhi who got electrocuted after grabbing an electric pole outside the New Delhi Railway Station where she came to catch the Bhopal Shatabdi train. There was waterlogging outside the Railway… pic.twitter.com/M4NwA3Rwij
— ANI (@ANI) June 25, 2023
பாதிக்கப்பட்டவரின் சகோதரி மாத்வி சோப்ரா, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தைக் குற்றம் சாட்டி புகார் அளித்தார், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் குறித்து ரயில்வே மற்றும் பொலிஸார் அலட்சியத்திற்கு யார் காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் இன்று அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sakshi Ahuja, Delhi Railway Station, Delhi Rains, Current Shock, Electrocution
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |