காட்டுக்குள் திருமணம்... இளம் பெண்ணை கொன்று தின்ற கரடி: நடுங்கும் சம்பவம்
ரஷ்யாவில் காட்டுக்குள் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இளம் பெண் ஒருவர் கரடிக்கு பலியான சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Sverdlovsk பிராந்தியத்திலேயே குறித்த நடுங்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. taiga பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருந்து நண்பர்களிடம் வாக்குவாத்தில் ஏற்பட்டு தனியாக சென்ற 24 வயது Yana Balobanova என்பவர் ஜூலை 2 முதல் மாயமானதாகவே கூறப்பட்டது.
நண்பர்கள் முன்னிலையில் காட்டுக்குள் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்ற அவர், பின்னர் காட்டின் உட்பகுதிக்கு சென்றுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பதற்றமடைந்த நண்பர்கள் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் அளிக்கவே, அன்று இரவும் மறு நாள் பகலும் தேடியும் Yana Balobanova தொடர்பில் மீட்புக் குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து மோப்ப நாய்களை பயன்படுத்த, ஒருகட்டத்தில் கரடியின் வாசனை அறிந்து மோப்ப நாய்கள் கலவரமடைந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கரடியின் கால் தடங்களை கண்டறிந்த மீட்புக்குழுவினர், இளம் பெண்ணை கரடி தின்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். கரடியின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் காட்டுக்குள் மாயமான குறித்த இளம் பெண்ணை இனி உயிருடன் மீட்பது கடினம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமது மகள் மாயமானதில் சந்தேகம் இருப்பதாகவும், அந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தாம் அறிவுறுத்தியதாகவும் Yana Balobanova-ன் தந்தை கூறியுள்ளார்.
மட்டுமின்றி மணப்பெண் தொடர்பிலும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் Yana Balobanova மறைவுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, Yana Balobanova தங்கள் திருமணத்தில் கலந்து கொல்லவில்லை என மணப்பெண்ணும் அவரது புதிய கணவரும் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.