மகள்களை கொன்றுவிட்டு தப்பியோடிய தாய்: தென்கொரியாவில் கைது செய்து நாடுகடத்தல்
நியூசிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது மகள்களை கொலை செய்த வழக்கில் தென்கொரியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்.
பழச்சாற்றில் மாத்திரை
நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த ஹக்கி யுங் லீ என்ற 45 வயது பெண், தனது கணவர் 2018யில் உயிரிழந்ததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். 
ஹக்கி ஒரு கட்டத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்துள்ளார். இதற்காக அவர் தூக்க மாத்திரைகளை பழச்சாற்றில் கலந்துள்ளார்.
முதலில் தனது இரண்டு மகள்களுக்கும் அதனை கொடுத்த பின் அவரும் குடித்துள்ளார். அதன் பின்னர் மூவரும் தூக்கியுள்ளனர்.
ஆனால் காலையில் ஹக்கி மட்டுமே கண்விழித்துள்ளார். தனது மகள்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து பயந்த அவர், சடலங்களை ஒரு சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தென் கொரியாவிற்கு தப்பியோடியுள்ளார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் 2022ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போது அந்த வீட்டை வாங்கிய தம்பதி இதனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து தென் கொரியாவிற்கு விரைந்த பொலிஸார், ஹக்கி யுங் லீயை கைது செய்து நியூஸிலாந்திற்கு நாடு கடத்தினர்.
ஆக்லாந்து நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது ஹக்கி யுங் லீ மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |