இத்தோடு மொத்தம் 10குழந்தைகள்: 8வது பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி
ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் தன்னுடைய 8 வது பிரசவத்தில் ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
7 குழந்தைகளுக்கு பெற்றோர்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜிப்பூர் பகுதியை சேர்ந்த உசூர் பழங்குடியினரான தேவா மற்றும் அவரது மனைவி போஜ்ஜா ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3பெண் குழந்தைகள் என 7 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவாவின் மனைவி போஜ்ஜா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
shironosov/Thinkstock
இதையடுத்து கடந்த 2ம் திகதி பத்ராசலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போஜ்ஜா மீண்டும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8வது பிரசவத்தில் 3 குழந்தை
இதையடுத்து போஜ்ஜா-வை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் ஹீமோகுளோபின் அளவு 5.1 கிராம் என்ற அளவில் மிக குறைவாக இருக்கிறது, இது பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்து இருந்தனர்.
அத்துடன் போஜ்ஜா வயிற்றில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் போஜ்ஜா இறுதியில் சுகபிரசவத்தில் ஒரே நேரத்தில் 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இதன் மூலம் தற்போது தேவா மற்றும் போஜ்ஜா தம்பதிக்கு 10 குழந்தைகள் உள்ளனர்.
இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு விதிப்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது என அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், தேவா தம்பதி 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
தேவா மற்றும் போஜ்ஜா தம்பதிக்கு குடும்ப கட்டுப்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு சென்று சேராததே அவர்கள் 10 குழந்தைகளை பெற்றுக் கொண்டதற்கான காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |