கொதிக்கும் காபியை McDonald's கடை ஊழியர் மீது வீசிய பெண்! சிசிடிவி காட்சியால் கொந்தளிப்பு
அமெரிக்காவில் மெக்டொனால்ட் கடை மேலாளரின் மீது சூடான காபியை பெண் ஒருவர் வீசியதால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணின் மோசமான செயல்
மிச்சிகனில் உள்ள மெக்டொனால்ட்(McDonald's) கடையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு தாமதமானதை தொடர்ந்து கோபமடைந்த 48 வயதான காஷாரா பிரவுன் என்ற பெண், கடை மேலாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Police are looking for a woman who threw boiling coffee on a McDonald’s manager after her order was canceled following an hour-long wait.
— Daily Loud (@DailyLoud) November 5, 2025
pic.twitter.com/G9Eum9zh2A
சிசிடிவி-யில் பதிவான காட்சிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக குறிப்பிட்டு, கடை ஊழியரை காஷாரா பிரவுன் “பெய்யர்” என திட்டுவதை பார்க்க முடிகிறது.
நிலைமையை சமாளிக்க முயன்ற மோலாளர், காஷாரா பிரவுனிடம் அவருக்கான காபியை வழங்கிவிட்டு, இதற்காக மட்டும் தான் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. உங்களுக்கு பணத்தை திரும்ப பெற 48 மணி நேரம் ஆகும் என்று தெரிவித்து விட்டு தனது வேலைக்கு திரும்ப முயற்சித்தார்.
ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமான காஷாரா பிரவுன், “இந்தா உன்னுடைய சூடான காபி” என்று கூச்சலிட்டு கொண்டே கொதிக்கும் காபியை மேலாளர் மீது வீசியுள்ளார்.

பெண்ணை கைது செய்ய நடவடிக்கை
இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷாரா பிரவுனை பொலிஸார் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்தனர்.
மேலும் ஊழியர் மீதான தாக்குதலுக்காக காஷாரா பிரவுனை கைது செய்ய பொலிஸார் பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.
அதே சமயம், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் மற்றும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
| நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |