கணவனின் சாம்பலை உண்ணும் மனைவி: பிரித்தானிய பெண்ணின் விசித்திர கதை
பிரித்தானியாவில் கணவனின் சாம்பலை உண்ணும் மனைவியின் விசித்திரமான கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கணவனின் சாம்பலை உண்ணும் மனைவி
பிரித்தானியாவின் டென்னசி(Tennessee) பகுதியை சேர்ந்த காஸி(Cassie) என்ற பெண் “My strange Addiction” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னுடைய வித்தியாசமான பழக்கத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அதில், மனைவி காஸி தன்னுடைய தன்னுடைய 10 மாத காதல் கணவர் ஷானின்(Sean) சாம்பலை அவரது ஞாபகமாக தினமும் சாப்பிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

கணவனின் பிரிவை தாங்க முடியாமல் அவரது சாம்பலை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் காஸி, ஒருமுறை கணவரின் சாம்பலை பெட்டி ஒன்றில் இருந்து அதற்குரிய ஜாடிக்குள் மாற்றிய போது, அதன் சில துகள்கள் காஸியின் விரல்களில் படிந்துள்ளது.
அதை துடைத்து எடுக்க மனம் இல்லாமல், கணவனின் சாம்பலை சாப்பிட்ட காஸிக்கு அதுவே பின்னர் போதையாக மாறியதாக தெரிவித்துள்ளார்.
உடல் எடை குறைந்த காஸி
கணவரின் சாம்பலை சாப்பிடுவது தினசரி பழக்கமாக மாறி விட்ட நிலையில், காஸி தன்னுடைய வழக்கமான உணவுகளை இதனால் தவிர்த்துள்ளார்.
சாதாரண உணவை தவிர்த்ததால் காஸியின் எடை 5 பவுண்ட் வரை குறைந்துள்ளது.
தற்போது காஸியின் அச்சம் என்னவென்றால், கணவனின் சாம்பல் தீர்ந்துவிட்டால் கணவன் ஷான் நிரந்தரமாக தன்னை விட்டு சென்று விடுவாரோ என்ற பயம் தான்.
மருத்துவ முறையில் காஸியின் நிலைக்கு பைக்கா(Pica) என்ற ஒருவகை மனநோய் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காஸி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |