8வது மாடியில் இருந்து குதித்த கை கால்கள் கட்டப்பட்ட பெண்: கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி!
- கொலை செய்ய வந்த நபரிடம் இருந்து தப்பிக்க கை கால்கள் கட்டப்பட்ட பெண் 8வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
- சம்பவ இடத்தை மீண்டும் பார்க்க வந்தபோது குற்றவாளி கைது.
- ghost gun-கள் அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு.
அமெரிக்காவில் துப்பாக்கியால் கொலை செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து பெண் ஒருவர் குதித்து உயிர்தப்ப முயன்று இருப்பது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கு வாஷிங்டன் பகுதியில் ghost guns எனப்படும் துப்பாக்கியால் தன்னை கொலை செய்ய வந்த நபரிடம் இருந்து கை கால்கள் கட்டப்பட்ட பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 8வது தளத்தில் இருந்து குதித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
Commander Bedlion provides an update to the domestic incident in the 4500 block of Connecticut Ave, NW. pic.twitter.com/57fobvuZIq
— DC Police Department (@DCPoliceDept) April 22, 2022
இந்த நிலையில் சம்பவம் குறித்து ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள காவல் துறை, அமெரிக்காவின் வடமேற்கு வாஷிங்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 8வது தளத்தில் எற்பட்டுள்ள தகராறில் கை கால்கள் கட்டபட்டு இருந்த பெண், தனது கைகளின் கட்டுகளை மட்டும் முடிந்த வரை தளர்த்திவிட்டு 8வது தளத்தில் தளத்தில் இருந்து குதித்துள்ளார், இதையடுத்து நிலவரத்தை உணர்ந்த குற்றவாளி அங்கிருந்து தப்பி சென்றுள்ளான் என தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெளிவந்த பொலிசார் அறிக்கையில், தன்னை துப்பாக்கியால் கொலை செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து பெண் குதித்துள்ளார் எனவும், சம்பவ இடத்தில் இருந்து ghost guns எனப்படும் துப்பாக்கி கண்டெடுக்கப் பட்டு இருபதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச் சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு வந்த கைலி ஜமால் பால்மர் என்ற நபர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்க்கு திரும்பி வந்தபோது பொலிசார் அவனை கைது செய்து கொலை முயற்சி செய்தது, பதிவுசெய்யப்படாத ஆயுதத்தை வைத்து இருந்தது போன்ற பிரிவுகளில் வழக்கு செய்து விசாரணையில் அடைத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: மரியுபோல் நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற்றம்: உக்ரைன் துணைப் பிரதமர் அதிரடி!
மேலும் பதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ghost guns என்பது அரசாங்கத்தால் அனுமதிக்கப்படாத தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் ஆகும், இவை கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 20,000 குற்றச் சம்பவ இடங்களில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மற்றும் இந்த ghost gun-களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் ஒழிக்கப்போவதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடதக்கது.
இந்த செய்திக்கான வளம்: NDTV News