மரியுபோல் நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற்றம்: உக்ரைன் துணைப் பிரதமர் அதிரடி!
- மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்ற உக்ரைன் திட்டம்
- திட்டமிட்டப் படி செயல்கள் நடந்தால் இன்று மதியம் மரியுபோல் மக்கள் வெளியேற்றப்படுவார்கள்
நாங்கள் திட்டமிட்டப் படி நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டால் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மரியுபோல் நகரில் இருந்து அதிகமான பொதுமக்களை வெளியேற்றிவிடுவோம் என துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மிக முக்கியமான துறைமுக நகரான மரியுபோல் இரண்டு மாத தொடர் போராட்டத்திற்கு பிறகு ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது.
நகரின் பெரும்பாலான இடங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி இருக்கும் இந்த நிலையிலும், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை போன்ற சில இடங்களில் உக்ரைன் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பதுங்கியுள்ளனர்.
இந்த நிலையில், திட்டமிட்டப் படி நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டால் மரியுபோல் நகரில் இருந்து அதிகமான பொதுமக்களை இன்று வெளியேற்றி விடுவோம் என உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உணவு இல்லை தீரப்போகிறது தயவுசெய்து காப்பாற்றுங்கள்... கவலையில் உருகிய மக்கள்!
மேலும் இந்த வெளியேற்ற திட்டமானது இன்று மதியவேளையில் (09:00 GMT, 10:00 BST) மேற்கொள்ளப்படும் எனவும் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்தின் தீவிர கட்டுப்பாட்டில் இருக்கும் மரியுபோல் நகரில் இதுவரை திட்டமிட்டு இருந்த அனைத்து பொதுமக்கள் வெளியேற்ற முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்து இருக்கும் சூழ்நிலையில் தற்போதைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த செய்திக்கான வளம்: பிபிசி செய்திகள்