உணவு இல்லை தீரப்போகிறது தயவுசெய்து காப்பாற்றுங்கள்... கவலையில் உருகிய மக்கள்!
- 59 நாளாக தொடரும் உக்ரைன் ரஷ்யா போர்
- பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என மரியுபோலில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் கோரிக்கை
- உணவு பொருள்கள் தீர்ந்து வருகிறது, நாங்கள் சூரிய ஒளியை பார்க்க வேண்டும் என உருக்கம்
உணவு பொருள்கள் தீர்ந்து வருகிறது தயவுசெய்து எங்களை இங்கு இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் விடியோ வாயிலாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்ய போரானது 59 நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை தவிர தற்போது நகரின் பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
In the video, civilians say that they are running out of food, ask for evacuation to the Ukrainian-controlled territories, saying that they want to see their relatives and sunlight. On April 22, Ombudsman Lyudmila Denisova said that around 1,000 civilians are trapped at Azovstal.
— The Kyiv Independent (@KyivIndependent) April 23, 2022
இருப்பினும், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை தரையில் போட்டுவிட்டு விரைவாக சரணடைய வேண்டும் என்று ரஷ்ய ராணுவம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை இரண்டு மாதங்களுக்கு மேலாக பதுங்கி இருக்கும் உக்ரைனியர்கள் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
அதில், இரண்டு மாதங்களுக்கு மேலாக இங்கு பதுங்கி இருக்கிறோம், எங்களின் உணவு பொருள்கள் தீர்ந்துவருகிறது அதனால் தயவு செய்து எங்களை இங்கு இருந்து உக்ரைன் கட்டுபாட்டில் இருக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: சுருங்கிவரும் புடினின் தொடர்பு வட்டாரங்கள்: சுயசரிதை நூலாசிரியர் தகவல்!
மேலும், நாங்கள் எங்களது உறவினர்களை சந்திக்க வேண்டும், சூரிய ஒளியை பார்க்க வேண்டும் என கவலை தோய்ந்த முகத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒம்புட்ஸ்மேன் லியுட்மிலா டெனிசோவா தெரிவித்தன் அடிப்படையில் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் கிட்டதட்ட 1000 பொதுமக்கள் பதுங்கி இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திக்கான வளம்: ட்விட்டர், The Kyiv Independent