ஆப்பிரிக்க கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த பெண்: அடுத்து நேர்ந்த விபரீதம்
Woman killed by shark in south african beach: தென் ஆப்பிரிக்கக் கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா தாக்கியதில் உயிரிழந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த 65 வயது பெண், சுறா தாக்கியதில் உயிரிழந்தார்.
சுறா மீன் தாக்கும் சம்பவங்கள்
தென் ஆப்பிரிக்காவின் நீண்ட கடற்கரையோரம் சுறா மீன் தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
செவ்வாய்க்கிழமையன்று, குகோம்போ நகரில் உள்ள ஓரியண்ட் கடற்கரையில் பெண்ணொருவர் ஒரு குழுவுடன் நீந்திக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது சுறா ஒன்று அவரை மோசமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுமக்கள் தண்ணீருக்குள் செல்ல வேண்டாம்
இந்தத் தாக்குதலையடுத்து, நகராட்சி அருகிலுள்ள கடற்கரைகளை மூடியதுடன், பொதுமக்கள் தண்ணீருக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
பின்னர் நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ஓய்வுபெற்ற அணுக்கரு கதிரியக்க நிபுணரான ஜானின் லோக்ரன்பெர்க் (65) என உள்ளூரில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வழக்கமாக நீந்துபவர் என்றும், ஒரு குழுவினருடன் நீந்திக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
