பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை! தெரிய வந்த பகீர் காரணம்
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தாயே இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பணிக்கு முயற்சித்த இளம்பெண்
கிருஷ்ணகிரி மாவட்டம் கோழிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
குணசேகரனின் மனைவி தெய்வா(30). பிள்ளைகள் இனியா (8), கோகுல கிருஷ்ணன் (4). பட்டப்படிப்பு முடித்துள்ள தெய்வா அரசுப் பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.
பல்வேறு தேர்வுகளை அவர் எழுதிய நிலையில் எதிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
iStock
பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை
இந்த நிலையில், தற்கொலை முடிவெடுத்த அவர் பிள்ளைகளுக்கு தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குணசேகரன் வீடு நீண்ட நேரமாக அமைதியாக இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே பார்த்தபோது, தெய்வா மற்றும் அவரது இரு பிள்ளைகளும் இறந்து கிடந்துள்ளனர்.
Representational Image
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், தெய்வாவின் தாயார் பூங்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயே பிள்ளைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.