ரூ.7 கோடி கோரிய பெண்ணின் காப்பீடு ரத்து.., ஒற்றை புகைப்படத்தால் ஏமாற்றி வந்தது அம்பலம்
கார் விபத்தினால் தன்னால் செயல்பட முடியவில்லை என்று ரூ.7 கோடி இழப்பீடு கோரிய பெண்ணின் காப்பீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ரூ.7 கோடி இழப்பீடு
ஐரோப்பா நாடான அயர்லாந்தில் (Ireland) வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா (36) (Kamila Grabska). இவர், கடந்த 2017 -ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
இதனால், தனது கழுத்து பகுதி மற்றும் முதுகு தண்டில் ஏற்பட்ட காயத்தால் 5 வருடங்கள் செயல்பட முடியாமல் இருந்ததாகவும், தனது குழந்தைகளுடன் விளையாட முடியவில்லை எனவும் இழப்பீடு தொகையை காப்பீடு நிறுவனத்தில் கோரியிருந்தார்.
அவர் கோரிய ரூ.7 கோடி இழப்பீடு தொகையை அவர்கள் தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை மேற்கு அயர்லாந்தின் Limerick பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அவர் தனது சமகால ஊதிய இழப்பு மற்றும் எதிர்கால உத்தேச ஊதிய இழப்புடன் ரூ.7 கோடி இழப்பீடு கோரியிருந்தார்.
ஒற்றை புகைப்படம்
இந்த வழக்கின் விசாரணையில் 2018 -ம் ஆண்டு நன்கொடை நிகழ்ச்சி ஒன்றில் கமிலா பங்கேற்ற புகைப்படங்கள் அவருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டது. அதனுடன், பூங்காவில் அவர் தனது நாயுடன் சாதாரணமாக 1 மணிநேரம் செலவிடும் வீடியோ ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.
குறிப்பாக அந்த புகைப்படத்தில் கமிலா 5 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை தூக்கி வீசும் காட்சி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "பெரிதாக இருக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை எளிதாக கமலா தூக்கி வீசுவது புகைப்படத்தில் தெரிகிறது.
தன்னை முடக்கும் அளவுக்கு அவர் காப்பீடு கோருவது மிகைப்படுத்துதல் போல தெரிகிறது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |