பிரபல நடிகரை காதலிப்பதாக நம்பி மோசடி நபரிடம் 700,000 பவுண்டுகளை இழந்த பெண்
பிரான்ஸ் நாட்டவரான பெண்ணொருவர், தான் பிரபல நடிகரான பிராட் பிட்டை காதலிப்பதாக எண்ணி மோசடி நபர் ஒருவரிடம் சுமார் 700,000 பவுண்டுகளை இழந்துள்ளார்.
பிரபல நடிகரை காதலிப்பதாக நம்பிய பெண்
பிரான்ஸ் நாட்டவரான ஆன் (Anne, 53) என்னும் பெண், இணையம் வாயிலாக பிரபல நடிகரும், பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் முன்னாள் கணவருமான பிராட் பிட் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஒரு நபரை காதலித்துவந்துள்ளார்.
ஆனால், சமீபத்தில்தான் அவருக்கு தெரிந்துள்ளது. தன்னிடம் பிராட் பிட் என்று கூறி யாரோ ஒரு மோசடி நபர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பது.
தன்னை பிராட் பிட் என்று அறிமுகம் செய்துகொண்ட அந்த நபர், தான் ஏஞ்சலினா ஜோலியை விவாகரத்து செய்வதால் தனது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தனது புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அவரை பிராட் பிட் என்றே முழுமையாக நம்பிவிட்ட ஆன், அவருக்கு 700,000 பவுண்டுகள் பணம் அனுப்பியுள்ளார்.
தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
இந்நிலையில், ஏஞ்சலினா ஜோலியைப் பிரிந்த பிராட் பிட், Inés de Ramon என்னும் பெண்ணைக் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிராட் பிட்டும் Inés de Ramonம் இணைந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்தபிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுவிட்டதே ஆனுக்கு தெரியவந்துள்ளது.
ஆன் பொலிசில் புகாரளித்துள்ள நிலையில், மறுபக்கமோ இப்படி ஒருவர் ஏமாறுவாரா என ஏராளமானோர் சமூக ஊடகங்களில் ஆனை கேலி செய்து வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |