Facebook வழியாக IPL Ticket வாங்க முயற்சி! 86,000 ரூபாயை பறிகொடுத்து தவிக்கும் பெண்
Facebook வழியாக IPL Ticket வாங்க முயன்ற பெண்ணிடம் ரூ.86,000 மோசடி செய்த கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.
IPL Ticket
இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூரூவைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் ஓன்லைன் வழியாக IPL Ticket வாங்க முயற்சி செய்துள்ளார்.
அவர் கடந்த மார்ச் 29 -ம் திகதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக 20 டிக்கெட்டுகளை வாங்க முயற்சி செய்துள்ளார்.
அவர் Facebook தளத்தில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் என்ற பக்கத்தை பார்த்துள்ளார். அதில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய நபரும் அவருக்கு டிக்கெட்டுகளை வாங்கி தருவதாக கூறி ரூ.80000 -யை தவணை முறையில் வாங்கியுள்ளார்.
அவர், பணத்தை மட்டும் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருந்ததால் பணத்தை கொடுங்கள் அல்லது டிக்கெட்டுகளை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மேற்கொண்டு பணத்தை கேட்டுள்ளார்.
ஆனால், அந்த பெண் பணத்தை கொடுக்க மறுத்ததோடு பொலிசில் புகார் அளிப்பேன் என்றும் கூறியுள்ளார். அப்போது அந்த நபர், முடிந்தால் புகார் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அந்த பெண் பெங்களூருவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |