ஆக்ஸிஜன் மாஸ்க் உடன் சமையலறையில் பெண்: இணையவாசிகளை மொத்தமாக கொந்தளிக்க வைத்த புகைப்படம்
ஆக்ஸிஜன் மாஸ்க் உடன் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி இணையவாசிகளை கொந்தளிக்க செய்தது.
குறித்த புகைப்படத்தில், நிபந்தனைகளற்ற அன்பு என்றால் அது தாயார் தான், அவளுக்கு மட்டும் ஓய்வென்பதே இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த புகைப்படம், தற்போதைய சூழலுடன் பொருந்துவதால் என்னவோ, பல ஆயிரம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
அதேவேளை பலரது கோபத்தையும் தூண்டியது. பல பிரபலங்கள் அந்த புகைப்படம் முன்வைக்கும் கருத்தை காட்டமாக விமர்சித்துள்ளனர்.
அந்த புகைப்படம் சித்தரிக்கப்பட்டதாக இருந்தால் கூட அவ்வாறான ஒரு சமூகத்திலா நாம் வாழ்கிறோம் என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நோயாளியான தாயாருக்கு கூட விடுமுறை அளிக்காத எத்தனை குடியிருப்புகள் நமது இந்தியாவில் இருக்கிறது எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான நவீன், இது ஒன்றும் அன்பு அல்ல. நம் சமூக கட்டமைப்பின் பெயரில் முன்னெடுக்கப்படும் அடிமைத்தனம் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இவ்வாறான ஒரு சூழலில் அந்த பெண்மணியை சமைக்க வைப்பதே குற்றச்செயல் என பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் அந்த புகைப்படன் சித்தரிக்கப்பட்டதா அல்லது புகைப்படத்திற்காக மட்டும் ஜோடிக்கப்பட்டதா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.