இளம் பெண்ணை சுட்டுக் கொன்ற குடிவரவு அதிகாரிகள்: மினியாபோலிஸ் மேயர் கண்டனம்
அமெரிக்காவில் பெண் ஒருவர் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ICE அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்
அமெரிக்காவின் மினியாபோலிஸ்(Minneapolis) பகுதியில் இளம் பெண் ஒருவர் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின்(Immigration and Customs Enforcement) பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் ரெனி நிக்கோல் குட்(Renee Nicole Good) என்று நகர சபை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் தனது அண்டை வீட்டுக்காரர்களுடன் வெளியே சென்றிருந்த போது பெடரல் அதிகாரிகளின் கைகளால் ரெனி நிக்கோல் குட் உயிர் பறிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் வழங்கிய தகவலில், உயிரிழந்த பெண் தன்னுடைய வாகனத்தை கொண்டு அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மினியாபோலிஸ் மேயர் கண்டனம்
இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் செயலை மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரெ(Jacob Frey) கடுமையாக கண்டித்துள்ளார்.
அதில், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகளின் செயலை மிகவும் மோசமானது என குறிப்பிட்டதுடன், நகரத்தை விட்டு அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தங்கள் செயலை தற்காப்பு நடவடிக்கை என்று ஏற்கனவே மாற்ற தொடங்கி விட்டதாகவும், வீடியோ காட்சிகளை தான் பார்த்ததாகவும், அதிகாரிகள் செயல் மிகவும் மோசமானது என்றும் மேயர் ஜேக்கப் ஃப்ரெ கண்டித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |