திருமண நிச்சயத்திற்காக உல்லாசப் பயணம்..100 அடி உயரத்தில் தவறி விழுந்து புதுப்பெண் மரணம்
துருக்கியில் புதுப்பெண் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருமண நிச்சயதார்த்தம்
துருக்கி நாட்டில் யெசிம் டெமிர் என்ற 39 வயது பெண், தனது காதலர் நிஸாமேட்டின் உடன் வடமேற்கு பகுதியில் உள்ள Canakkaleவிற்கு விடுமுறையில் சென்றுள்ளார்.
அங்கு தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை கொண்டாட அவர்கள் சுற்றுலா மேற்கொண்டிருந்தனர். குறித்த ஜோடி சூரிய அஸ்தமனத்தை ரசிக்க குன்றின் மீது எறியுள்ளது.
அச்சமயம் நிஸாமேட்டின் காரில் இருந்து சுற்றுலாப் பொருட்களை எடுக்க சென்றதாக கூறப்படுகிறது.
News Flash
தவறி விழுந்து மரணம்
அப்போது யெசிம் டெமிரின் அலறல் சத்தம் கேட்டு அவர் விரைந்து வந்து பார்த்துள்ளார். அங்கிருந்த தனது வருங்கால மனைவி குன்றின் மீது தவறி விழுந்துள்ளார்.
சுமார் 104 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் படுகாயமடைந்த அவர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |