வெட்டவெளியில் குழந்தைகள் கண்முன் தாய்க்கு நேர்ந்த பரிதாபம்! தப்பியோடிய குற்றவாளி
இந்திய தலைநகர் டெல்லியில் இரு குழந்தைகள் கண் முன் தாய் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு டெல்லியில் வியாழக்கிஹ்ஸ்மை மதியம் 2 மணியளவில் வெட்டவெளியில் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, "ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதாக சாகர் பூர் காவல் நிலையத்தில் மதியம் 2:00 மணியளவில் எங்களுக்கு PCR அழைப்பு வந்தது. நாங்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்றோம். அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்" என்று கூறினார்.
மேலும், "சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் அப்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குச் செல்லும் போது அவரை ஒரு நபர் துரத்துவதைக் காட்டுகிறது" என்று பொலிஸார் தெரிவித்தனர்.
"மதியம் 2:10 மணியளவில் குற்றம் சாட்டப்பட்டவர் அப்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்," என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
விசாரணையில், அந்தப் பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவரும் முன்னதாக பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் என்று தெரியவந்தது.
அப்பெண் தற்போதைய வீட்டிற்குச் செல்லும் சென்றுகொண்டிருக்கும்போது தான் வழியில் கொல்லப்பட்டுள்ளார். எனினும் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
Photo: TimesNow
"கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்" என்று காவல்துறை அதிகாரி கூறினார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.