குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் சென்ற பெண்., 34 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசடி அம்பலம்
அமெரிக்காவில் 34 ஆண்டுகளுக்கு முன் செயற்கை கருவூட்டளுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த மோசடி இப்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கு, 34 ஆண்டுகளுக்கு முன், பெண் ஒருவர் தனக்கு செயற்கை கருவூட்டல் செய்த மருத்துவர் மீது இப்போது வழக்கு தொடர்ந்தார்.
அப்பெண்ணின் கருவூட்டல் செயல்முறைக்கு மருத்துவர் தனது சொந்த விந்தணுவை செலுத்தி மோசடி செய்திருப்பதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது 67 வயதாகிறது. இந்த விவகாரம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணத்தில் உள்ள ஹவுசர் பகுதியைச் சேர்ந்த ஷரோன் ஹேய்ஸுக்கு (Sharon Hayes) வயது 67. அவரது கணவனுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் இருந்ததால், 1989-ஆம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் உள்ள மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் டேவிட் ஆர். கிளேபூலிடம் (Dr David R Claypool) கருவுறுதல் சிகிச்சையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
ஆனால், தன் கருவுறுதல் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும், தனக்குத் தெரியாதவர்களிடம் இருந்து விந்தணுவை எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தாள். ஆனால் இந்த சிகிச்சையில் மருத்துவர் தனது விந்தணுவையே பயன்படுத்தியதை இப்போது அறிந்து கோபம் அடைந்துள்ளார்.
இதனால், ஷரோன் சென்ற புதன்கிழமையன்று ஸ்போகேன் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் டாக்டர் டேவிட் மீது வழக்குத் தொடர்ந்தார்.
அதில், மருத்துவர் டேவிட் கிளேபூல் தவறான தகவலை அளித்துள்ளார் என்று கூறியுள்ளார். முடி மற்றும் கண் நிறம் போன்ற குணாதிசயங்களின் அடிப்படையில் விந்தணு தானம் செய்பவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் உறுதியளித்ததாகவும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்கொடையாளருக்கு உடல்நலம் மற்றும் மரபணு பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்காக அவர்களிடம் இருந்து 100 டொலர் பணத்தை வாங்கியுள்ளார். இந்த பணம் விந்தணுவை தானமாக வழங்கும் கல்லூரி அல்லது மருத்துவ மாணவர்களுக்கு சென்றடையும் என்றும் கூறினார்.
செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த ஷரோனின் மகள் ப்ரியானா ஹேய்ஸுக்கு (Brianna Hayes) தற்போது 33 வயதாகிறது. டிஎன்ஏ சோதனை மற்றும் பரம்பரை வலைத்தளமான 23andMe-க்கு தனது டிஎன்ஏவை சமர்ப்பித்த பிறகு அவர் சமீபத்தில் தனது உயிரியல் தந்தையின் அடையாளத்தை கண்டுபிடித்தார்.
அப்போது மற்றொரு ஆச்சரியமான விஷயம் தெரியவந்தது. ப்ரியானாவுக்கு குறைந்தது 16 உடன்பிறப்புகள் உள்ளனர். பலரிடம் இதுபோன்ற மோசடியை மருத்துவர் செய்திருப்பது தெரிய வருகிறது. ஆனால் இதுவரை அந்த மருத்துவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேறு யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது நிச்சயமாக ஒரு அடையாள நெருக்கடிதான் என்கிறார் ப்ரியானா ஹேய்ஸ் . இதை தன் வாழ்நாள் முழுவதும் மறைத்து வந்ததாகவும், அம்மாவின் அதிர்ச்சியை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம், தன்னால் சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஆனால் 40 வருடங்களில் இதுபோன்ற குற்றசாட்டை கேள்விப்படுவது இதுவே முதன்முறை என டேவிட் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Woman sues fertility doctor, doctor secretly inseminating his sperm, Sharon Hayes, Dr David R Claypool, Brianna Hayes