குழந்தை பெற்றெடுத்த 2 நாட்களில் இளம் பெண்ணிற்கு வளர்ந்த மூன்றாவது மார்பகம்! பால் சுரக்கும் அதிசயம்
போர்ச்சுக்கலில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு அக்குளில் மூன்றாவது மார்பகம் ஏற்பட்டு, அதில் பால் சுரக்கிறது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களில், அவரின் வலது கை அக்குளில் வலி ஏற்பட்டுள்ளது.
அதன் பின், அதில் பால் சுரப்பது போன்று, வெள்ளை திரவம் சுரந்து வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்து போன, அவர் உடனடியாக Lisbon-ல் இருக்கும் Santa Maria மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவருடைய அக்குளில் மூன்றாவது மார்பகம் இருப்பதை கண்டறிந்தனர். அதன் பின் அந்த வெள்ளை நிற திரவத்தை சோதித்து பார்த்த போது, தாய்ப்பால் என்பதையும் உறுதி செய்தனர்.
இதை மருத்துவர்கள் polymastia என்று கூறுகின்றனர். அதாவது உலகில் 6 சதவீத பெண்களுக்கு இது போன்று ஏற்படுமாம். சிலருக்கு, மார்பகத்துக்குரிய செல்கள் அக்குளிலும் வளரும். ஒரு சிலருக்கு பால் காம்பும் வளரும்.
மேலும் சிலருக்கு எந்த அறிகுறியும் தென்படாது. கர்ப்பம் தரிக்கும்போது தான், அக்குளில் இருக்கும் மார்பக செல்களும், பால் சுரப்பியும் செயல்படத் துவங்கும்.
குழந்தை பிறந்ததும் பால் சுரக்கும். அப்போதுதான், தங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு குறை இருப்பதே, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியும்.
குழந்தை வளரத் தொடங்கிய பின் தானாகவே அக்குள் மார்பகத்திலும் பால் சுரப்பது நின்று விடும் என்று கூறியுள்ளனர்.