பறக்கும் விமானத்தில் ஆடைகளை கழற்றிய பெண்; விமான ஊழியர்களுடன் சக பயணிகள் செய்த செயல்!
பறந்துகொண்டிருந்த விமானத்தில் தனது ஆடைகள் முழுவதையும் கழற்றிய பெண்ணை, விமான ஊழியர்களுடன் சக பயணிகள் சேர்ந்து அவரை கட்டிவைத்து அழைத்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் Vladivostok-லிருந்து கிளம்பிய ஒரு ரஷ்யா விமானத்தில் நடந்துள்ளது. 30 வயதான அந்த பெண் போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
விமான அப்புறப்பட்ட 15 நிமிடங்களில், அவர் விமானத்துக்குள் அங்கும் இங்கும் சுற்றியுள்ளார்.
பின்னர், தனது ஆடைகளை அடிக்கடி கழற்றி திரும்பவும் அணிந்துள்ளார். அவரை விமான குழுவினர் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் அவர் தனது உள்ளாடைகளும் கழற்றியுள்ளார்.
அவர் போதையில் தனது கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதை உணர்ந்த விமானப் பணிப்பெண்களும் சில பயணிகளும், அந்தப் பெண்ணுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அவரது இருக்கையில் கட்டி வைக்க முடிவு செய்தனர்.
Novosibirsk-ல் உள்ள Tolmachevo விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் வரை அந்தப் பெண்ணை நாற்காலியில் கட்டி அழைத்துவந்துள்ளனர்.
விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணை விசாரித்தபோது, விமானத்தில் ஏறுவதற்கு முன்பு synthetic drug-ஐ பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் அந்த பெண் பயன்படுத்திய போதைப்பொருளின் அளவைக் கண்டறிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் கூறியது. இந்த விவகாரத்தில் பொலிஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
