3-வது முறையாக லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற அதிர்ஷ்டசாலி பெண்!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி பெண்ணுக்கு மூன்றாவது முறையாக லொட்டரியில் ஜாக்போட் அடித்துள்ளது.
மேரிலாந்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள விகோமினோ கவுண்டியைச் சேர்ந்த 30 வயதான பெண், $100,000 லக்கி விளையாட்டில் 100,000 டொலர் (இலங்கை பண மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3.6 கோடி) வென்றார் என்று மேரிலாந்து லொட்டரி இணையதளம் தெரிவித்துள்ளது.
அப்பெண், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக லொட்டரி பரிசாக குறைந்தது 100,000 டொலர் வென்றார் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கனவில் கண்ட எண்கள்., லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற நபர்!
"நான் எவ்வளவு வெற்றி பெற்றேன் என்று பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை" என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். "நான் உடனடியாக என் கணவரை அழைத்து, 'நாம் மீண்டும் அதை செய்துவிட்டோம்' என்று சொன்னேன். மூன்றாவது முறையாக வெற்றி பெறுவது இன்னும் உற்சாகமாக இருந்தது. இதை நம்பவே முடியவில்லை”என்று அவர் கூறினார்.
அவருடன் வீட்டில் இருக்கும் அவரது தாய் இது அதிர்ஷ்டம் தான் என்று கூறினார், ஆனால் இருவரும் இந்த விஸ்ளையாட்டு குறித்து ஆராய்ச்சி செய்ததாக அப்பெண் கூறினார்.
2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!
மண்டேலா ஸ்பிரிங்ஸில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் வெறும் 30 டொலர் மதிப்புள்ள அந்த வெற்றிக்கான லொட்டரி சீட்டை டிக்கெட்டை வாங்கியதாக அவர் கூறினார்.
இந்த முறை 100,000 டொலருக்கு மேல் வென்றதாக சொன்ன லொட்டரி அதிகாரிகள் மற்ற இரண்டு முறை எப்போது வென்றார், எவ்வளவு வென்றார் என்று கூறவில்லை.