மகா கும்பமேளாவிலிருந்து திரும்பிய 4 பெண்கள்: அடுத்து நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் கும்பமேளாவில் இருந்து திரும்பிய 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மகா கும்பமேளா
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் மக்கள் வந்த வண்ணமும், கிளம்புவதுமாக உள்ளனர்.
இந்த நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள பிரயாக்ராஜுக்கு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் காரில் வீடு திரும்பியுள்ளனர். போஜ்பூர் மாவட்டத்தின் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை கார் இழந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே பலி
இதனால் சாலையில் நின்றுகொண்டிருந்த டேங்கர் லொறி மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் விபத்திற்குள்ளான காரில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |