லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பரிசு! அதன் காரணமாகவே உயிரிழந்த திருமணமான இளம்பெண்.... அதிர்ச்சி பின்னணி
அமெரிக்காவில் லொட்டரியில் $2 மில்லியன் பணத்தை வென்ற இளம்பெண் அதை அனுபவிக்க முடியாமல் கணவரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Oklahomaவை சேர்ந்தவர் டிபானி ஹில் (31). இவர் கணவர் டொனடோ (42). தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டிபானிக்கு லொட்டரியில் $2 மில்லியன் பரிசு விழுந்தது.
சமீபத்தில் இந்த பரிசு பணம் தொடர்பில் டிபானிக்கும் அவர் கணவர் டொனடோவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த டொனடோ, மனைவியையும், ஒரு வயது மகளையும் சுட்டு கொன்றுவிட்டு பிறகு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தில் தம்பதியின் மற்ற மூன்று குழந்தைகளுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் லொட்டரியில் டிபானிக்கு கிடைத்த பணம் அவரின் மூன்று குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கப்பட்டுள்ளது.
லொட்டரியில் பெரிய பரிசு விழுந்தும் அதை அனுபவிக்காமல் அது தொடர்பான சண்டையிலேயே டிபானி உள்ளிட்ட மூவரின் உயிர் பறிம்போனது அவர்களின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.