2 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் சொந்த வீட்டிலேயே கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிப்பு! மற்றொரு பெண் கைது
அமெரிக்காவில் பெண்ணொருவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வீட்டின் கீழ்தளத்தில் அவர் சடலம் புதைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நார்த் கரோலினாவை சேர்ந்தவர் லைன் கே கீன் (70). இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து வீட்டின் கீழ்தளத்தில் லைன் சடலம் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கொலை தான் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறுதியும் செய்யப்பட்டது.
மேலும் அவர் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லைன் கொலை தொடர்பாக அவரை பராமரித்து வந்த எலிசபெத் கேசேரினோ என்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
உயிரிழந்த லைனின் மகன் கடந்த 2001ல் நடந்த தீவிரவாதி தாக்குதலிலும், கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவாலும் இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.