ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்

Flight
By Ragavan Aug 09, 2026 07:03 PM GMT
Report

Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்

ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.

அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர். மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.

ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு

ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு

Women Chase Plane in Moscow Airport Scare

விமான இயக்கம் நிறுத்தப்பட்டது

இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.

பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்

இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US