மகளின் வளைகாப்புக்கு குடும்பத்துடன் சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்! கோர விபத்து
காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலி
மகளின் வளைகாப்புக்கு சென்றபோது நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் பலியாகினர்.
விருதுநகரைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி, சங்கரேஸ்வரி. இவர்களது மகளின் வளைகாப்புக்காக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்திற்கு காரில் சென்றுள்ளனர்.
பழனிசாமி - சங்கரேஸ்வரியின் இரு மகன்கள், பேத்திகள் உட்பட 11 பேர் அந்த காரில் பயணித்துள்ளனர். கார் ஒட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்துள்ளது.
இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சங்கரேஸ்வரி மற்றும் அவரது உறவினர் மருதாயி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த இரண்டு சிறுமிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.