வயல்வெளியில் இரவு தங்கிய தம்பதி! அடுப்பு தயார் செய்ய கல்லை எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் பாம்பு கடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராயர் (65). இவரது மனைவி சிந்தாமணி (58). இவர்கள் இருவரும் விவசாய கூலித்தொழிலாளிகள். சம்பவத்தன்று இருவரும் சிலால் கிராமத்தில் உள்ள அன்பழகன் என்பவரின் கடலை வயலில் கடலை அறுவடைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இரவு நேரமாகி விட்டதால் வயலிலேயே தங்கி மறுநாள் காலை தொடர்ந்து வேலை செய்யலாம் என்று முடிவு செய்தனர். மாலையில் இருட்டி விட்ட நிலையில் சமைப்பதற்காக அடுப்பு தயார் செய்ய ராயரின் மனைவி சிந்தாமணி வயல்வெளியில் இருந்த கல்லை எடுத்துள்ளார்.
அப்போது கல்லுக்கு கீழே இருந்த பாம்பு இருந்த நிலையில் சிந்தாமணி அதிர்ச்சியடைந்தார். ஆனால் நொடிப்பொழுதில் பாம்பு அவரை கடித்துள்ளது.
உடனே ராயர் சிந்தாமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்தாமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.