இளம்பெண்ணின் காதை காலுடன் இணைத்து தைத்த மருத்துவர்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி
சீனாவில், மருத்துவர்கள், இளம்பெண் ஒருவரின் காதை அவரது பாதத்துடன் இணைத்து தைத்ததைக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
காதை காலுடன் இணைத்து தைத்த மருத்துவர்கள்
கிழக்கு சீனாவிலுள்ள Jinan என்னும் நகரத்தில், சன் என்னும் இளம்பெண் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவரது தலைமுடி இயந்திரம் ஒன்றில் சிக்கியுள்ளது.

இயந்திரம் சுற்றிய வேகத்தில், அவரது தலைமுடி பிய்த்துக்கொண்டுவர, கூடவே அவரது ஒரு காதும், கழுத்திலுள்ள தோலும் பிய்த்துக்கொண்டு வந்துள்ளது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, அவரது காது பலத்த சேதமடைந்திருந்ததால், மீண்டும் அவரது காதை அதற்குரிய இடத்தில் பொருத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அந்த இளம்பெண்ணின் காதை அவரது பாதத்துடன் இணைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இத்தகைய அறுவை சிகிச்சை, heterotopic grafting என அழைக்கப்படுகிறது. என்றாலும், இதுபோல் காதை காலுடன் இணைப்பது அபூர்வம்தான்.

சன்னுடைய காயங்கள் ஆறியபின், மீண்டும் அவரது காதை அவரது காலிலிருந்து அகற்றி, சரியாக அதன் இடத்தில் பொருத்தியுள்ளார்கள் மருத்துவர்கள்.
அறுவை சிகிச்சை முடிந்து, பேண்டேஜை எல்லாம் அகற்றியபின், தன் முகத்தைப் பார்த்த சன், கண்ணீருடன் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |