தடுமாறிய அணி: கடைசி கட்டத்தில் 13 பந்தில் 39 ரன் விளாசிய வீராங்கனை..இந்திய அணிக்கு பதிலடி
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஃப்ரியா கெம்ப் அதிரடி
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டோலில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை நிதானமாக ஓட்டங்களை சேர்த்தனர்.
இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சில் அனுபவ வீராங்கனைகள் அதிரடியாக விளையாட தடுமாறினர்.

ஆனால், 6வது வீராங்கனையாக களமிறங்கிய ஃப்ரியா கெம்ப் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். அவர் 13 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
இங்கிலாந்து வெற்றி
இதன்மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்ரீ சரணி 3 விக்கெட்டுகளும், நந்தினி ஷர்மா, ஷ்ரேயங்கா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்ததால், இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக யஸ்திகா பாட்டியா 33 ஓட்டங்களும், ஸ்ம்ரிதி மந்தனா 32 ஓட்டங்களும் எடுத்தனர். லாரென் பெல், சார்லோட் டீன் மற்றும் கெம்ப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |