மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்., எதற்காக இப்படிச் செய்தார்?
ஒரு தாய் தனது மகனின் உறைந்த விந்தணுவைப் பயன்படுத்தி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தற்போது தனது மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்றதாக அறிவித்து உலகையே அதிர வைத்துள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த முன்னாள் நடிகையான அனா ஒப்ரேகானுக்கு (Ana Obregon) தற்போது 69 வயதாகிறது.
அவருக்கு முன்பு அலெஸ் லெகியோ (Aless Lequio) என்ற மகன் இருந்தார். ஆனால் அவர் தனது 27 வயதில் புற்றுநோயால் இறந்தார்.
ஆனால் அவர் இறப்பதற்கு முன் ஒரு நாள் தந்தையாக வேண்டும் என்ற நம்பிக்கையில் தனது விந்தணுவை சேமித்து வைத்தார்.
ஒரு மையத்தில் விந்தணுவை சேமித்து வைத்த பிறகு, அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார்.
பின்னர், அனா ஒப்ரெகன் தனது வீட்டில் கிடைத்த ரசீதில் இருந்து அலெஸ் லெகியோ தந்தையாக வேண்டும் என்ற நம்பிக்கையில் தனது விந்தணுவை சேமித்து வைத்திருந்தார் என்பதை அறிந்து கொண்டார்.
அதனால் தன் மகனின் தந்தையாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தாள்.
ஒரு வாடகைத் தாயாக தனது மகனின் விந்தணுவைக் கொண்டு கருவுற்று, 2023-ஆம் ஆண்டு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
குழந்தைக்கு Anita என பெயர் வைத்துள்ள அனா ஒப்ரேகான், அவர் பார்க்க அப்படியே தனது மகனைப் போலவே இருப்பதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் Anita-வின் முதல் பிறந்தநாளை அவர் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Surrogacy, Mother had baby with her sons sperm, actress Ana Obregon, Aless Lequio