ஆப்கானில் தாலிபான்களை எதிர்த்து.. துணிச்சலுடன் கையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் பெண்கள்! புல்லரிக்க வைக்கும் வீடியோ காட்சி
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக தங்களை தற்காத்து கொள்ள பெண்கள் கையில் துப்பாக்கிகளுடன் துணிச்சலாக நிற்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாலிபான்கள் தங்கள்வசமாக்கிக் கொண்ட பிறகு அந்த நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் அவர்களிடம் வந்து விட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே அவர்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
A group of women take up arms to defend themselves against #Taliban and seek to form a resistance in herat, #Afghanistan pic.twitter.com/Di2vyPQDDz
— News (@Articlenews3) August 18, 2021
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் மற்றொரு முக்கிய நகரமான ஹெறாத்தில் உள்ள பெண்கள் கையில் துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில் தாலிபான்களுக்கு எதிராக தங்களை தற்காத்து கொள்ள பெண்கள் கையில் துப்பாக்கிகளை துணிச்சலாக வைத்துள்ளனர்.
ஏனெனில் இந்த நகரில் தான் அவர்கள் தாலிபான்களை எதிர்க்க முயல்கின்றனர் என தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பெண்களின் துணிச்சல் வியப்பளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.